இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பின்னர், ஜனாதிபதியினால் 2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான யோசனைகள் அடங்கிய இறுதி ஆவணத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி பார்வையிட்டார்.
முக்கிய விடயங்கள்
- 2027 வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட அரச செலவினம் 4982 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம்
- இம்முறை செலவினம் 2026 ஆம் ஆண்டை விட 558 பில்லியன் ரூபாய் அதிகரிப்பு
- வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று முதல் டிசம்பர் 14 வரை 26 நாட்கள் நடைபெறும்
நிவாரணங்கள் குறித்த எதிர்பார்ப்புகள்
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்திருந்தனர். குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிவாரணங்கள் கிடைக்க வேண்டிய தரப்பினருக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவும் தெரிவித்துள்ளார்.
விவாதமும் வாக்கெடுப்பும்
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 20 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21 ஆம் திகதி முதல் நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
அடுத்து என்ன?
மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு இடம்பெற்ற பின்னர் வரவு செலவுத் திட்ட நடைமுறைகள் நிறைவடையவுள்ளன.






