ஈரானுடன் நிலவிவரும் இழுபறி நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசித்திரமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட கருத்துகளில், ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த மோதலில் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா பார்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்த குறிப்பிட்ட திகதி ஏன் முக்கியமானது என்பது குறித்து அவர் எந்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை.
இரு நாடுகளும் பதற்றமான சூழலில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மோதல் தீவிரமடையக்கூடும் என எச்சரிப்பதற்கும், பதற்றங்கள் தணியக்கூடும் என சூசகமாகத் தெரிவிப்பதற்கும் இடையில் ட்ரம்ப் அண்மைக்காலமாக மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றார்.
டேர்ட்டி குண்டு அறிக்கைகள் தொடர்பான கேள்விகள்
சீனாவுக்கான விஜயத்தின் போது பொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், பிறக்கவிருக்கும் புத்தாண்டை நினைவுகூர்ந்து, அவர்கள் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
வாஷிங்டனில் டேர்ட்டி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ய ஈரான் உத்தேசித்துள்ளதாக சிஎன்என் வெளியிட்ட அறிக்கை குறித்து இந்த செவ்வியின் போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கதிரியக்கப் பொருட்களை பரப்பும் வழக்கமான வெடிபொருட்கள் குறித்து தலைநகர் மக்கள் பீதியடைய வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் எளிய பதிலளித்து அந்த அச்சுறுத்தலை பெரிதுபடுத்தாமல் நிராகரித்தார்.
அவ்வாறிருந்த போதிலும், விபரங்களுக்குள் செல்லாமல், ஈரான் உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்களை நாடுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“எமக்கு ஒரு புத்தாண்டு வரவுள்ளது, ஜனவரி 1 இற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம். ஆனால் அவர்கள் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர்.”






