போதைப்பொருள் கடத்தல் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதில் தொடர்புபடும் எந்தவொரு உத்தியோகத்தரும் பொலிஸ் சேவையில் வைத்திருக்கப்பட மாட்டார்கள் எனப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முறைகேடான செயல்களில் ஈடுபடும் எந்தவொரு உத்தியோகத்தரையும் எவ்விதத்திலும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.
முக்கிய விடயங்கள்
- போதைப்பொருட்களுடன் தொடர்புடைய எந்தவொரு உத்தியோகத்தரும் பணியில் வைத்திருக்கப்பட மாட்டார்கள் எனப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
- அத்தகைய தவறுகளைச் செய்யும் உத்தியோகத்தர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதிப்படுத்தினார்.
- உத்தியோகத்தர்களின் சில கவனக்குறைவுகளால் பொலிஸார் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
மக்கள் நம்பிக்கையும் நிகழ்வும்
சில உத்தியோகத்தர்களால் நிகழும் பல்வேறு முறைகேடுகள், கவனக்குறைவுகள் மற்றும் கடமை தவறுதல்கள் காரணமாகப் பொலிஸார் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அவ்வப்போது சிதைந்துபோவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மஹியங்கனை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.






