2026 நவம்பர் 27 அன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 36 மணித்தியாலங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலேயே இவ்வாறு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்று ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் வானிலை
நாட்டின் ஏனைய பகுதிகளில், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அத்துடன் காலை வேளையில் பனிமூட்டமான வானிலையும் நிலவக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.






