2027 ஆம் ஆண்டுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களின் துறவற மற்றும் இல்லற மாணவர்கள், சீலமாதாக்களுக்கு பாதணிகளை வழங்கும் திட்டம் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
காவன்திஸ்ஸ யானையின் இறுதி உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு கல்கமுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை பல்கலைக்கழக கட்டமைப்பு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஒன்றிணைக்கும் போது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதி கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் டீசல் கசிவினைத் தடுப்பதற்கு இலங்கை கடலோரக் காவல்படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி பட்டதாரி வைத்தியர்களின் பயிலுநர் பயிற்சியை உடனடியாக ஆரம்பிப்பதற்கும், அதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.