2027 ஆம் ஆண்டுக்காகத் தெரிவுசெய்யப்படும் பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களின் துறவற மற்றும் இல்லற மாணவர்கள், சீலமாதாக்களுக்கு பாதணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் பணிகள் 2026.11.03 ஆம் திகதி முதல் 2026.12.20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இதன் ஊடாக வழங்கப்படும் கொடுப்பனவு சீட்டுகளை 2026.11.10 ஆம் திகதி முதல் 2026.12.20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய விடயங்கள்- பாதணி விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை 2026.11.03 முதல் 2026.12.20 வரை முன்னெடுக்கப்படும்
- கொடுப்பனவு சீட்டுகள் 2026.11.10 முதல் 2026.12.20 வரை டிஜிட்டல் முறைமைக்கு மாற்றப்படும்
- 4 மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் திறந்த சந்தையில் பாதணிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு
- 5 மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு விநியோகஸ்தர்கள் பாடசாலைகளுக்கே வருகை தந்து பாதணிகளை வழங்க ஏற்பாடு
மாகாண ரீதியாக பாதணிகள் விநியோகிக்கப்படும் விதம்
இக்கொடுப்பனவு சீட்டு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் திறந்த சந்தை ஊடாகத் தமக்குரிய பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும், மேல், தென், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய 5 மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இந்த வசதி மாறுபட்ட முறையில் கிடைக்கவுள்ளது. குறித்த மாகாணங்களின் மாணவர்களுக்காக உள்நாட்டுப் பாதணி விநியோகஸ்தர்கள் நேரடியாகப் பாடசாலைகளுக்கே வருகை தந்து பாதணிகளை வழங்குவர் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையும் வாசியுங்கள்- மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு: ஒரு கிலோ தேசிக்காய் 2,000 ரூபா, மாளு மிளகாய் 1,000 ரூபா
- காவன்திஸ்ஸ யானையின் இறுதிப் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
- இல் பௌர்ணமி தினத்தில் நுகேகொட சிறி தம்மாராம விகாரையில் இரத்ததான நிகழ்வு






