பலாங்கொடை, பெங்கியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திமோர்-லெஸ்டே கடற்பரப்பில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து, இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்றும் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச துறைக் கட்டுமானங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து பணிகளை விரைவுபடுத்துவதற்காக “Builders’ Gateway” கட்டுமானத் தொழில் வசதி மையம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல சூழல் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை இன்று (20) காலை 10:50 மணிக்கு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அடுத்த மாதமளவில் நாட்டின் பணவீக்க விகிதம் 9% அல்லது அதற்கு அண்மித்த நிலையை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா புனித சூசையப்பர் தேசியக் கல்லூரியைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவு மாணவர்கள் 36 பேர், திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.