காலஞ்சென்ற வணக்கத்துக்குரிய ரம்புகன சித்தார்த்த தேரரின் மூன்று மாத நினைவை முன்னிட்டு, FM தெரணவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தான புண்ணிய நிகழ்வு இன்று (18) தெரண தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் இன்று (18) நள்ளிரவு முதல் நவம்பர் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய பயனாளிகள் வங்கிக் கணக்குகளைத் திறக்கும் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தும் பணிகள் இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
குருணாகலிலிருந்து மாத்தளை நோக்கி உந்துருளிகளில் பயணித்தபோது விபத்துக்குள்ளான நண்பனை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டுப் பின்னால் சென்ற மற்றைய நண்பனும் விபத்துக்குள்ளாகி, இருவரும் உயிரிழந்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட வருடாந்த வருமான இலக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறித்த காலத்திற்கு முன்னரே வெற்றிகரமாக விஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.