2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027 தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வட்டவளை டெம்பில்ஸ்டோவ் தோட்டப் பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கொள்கை என்பவற்றை நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரெய்லி முறையில் தயாரிக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியாவின் பண்டா கடல் பிராந்தியத்தில் ரிச்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய சம்பள நிர்ணய சபை நியமிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
போட்ஸ்வானாவில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்து தரவரிசைப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற சனுகி அக்ஷனா, இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
முன்மொழியப்பட்டுள்ள அனுராதபுர புனித பூமி அபிவிருத்தி திட்டத்தை குழப்பாமல், அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பதில் அட்டமஸ்தானாதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக 15 நிரந்தர வீடுகளை அமைக்க டோக்கியோ சிமென்ட் குழுமம் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.