போட்ஸ்வானாவில் நடைபெற்ற 2026 உலக இளையோர் மேசைப்பந்து தரவரிசைப் போட்டியில் (World Youth Ranking Table Tennis Tournament - 2026) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய சனுகி அக்ஷனா, இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இப்போட்டித் தொடரில் 13 வயதுக்குட்பட்ட மற்றும் 15 வயதுக்குட்பட்ட ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிட்ட இவர், அவ்விரு பிரிவுகளிலுமே 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

முக்கிய விடயங்கள்
  • 13 வயதுக்குட்பட்ட மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் சனுகி 2 தங்கப் பதக்கங்களையும் வென்றார்.
  • இவர் 2026 ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றி உலகத் தரவரிசையில் 16 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • சனுகி அக்ஷனா அம்பலாந்தோட்டை தர்மாசோக்க கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியாவார்.

தந்தையும் பயிற்றுவிப்பாளருமான லக்ஷான் ஹர்ஷனவின் கருத்துக்கள்

கட்டுநாயக்கவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவரது தந்தையும் பயிற்றுவிப்பாளருமான லக்ஷான் ஹர்ஷன, சனுகி அக்ஷனா தற்போது உலகத் தரவரிசையில் 16 ஆவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் 3 போட்டித் தொடர்களில் மாத்திரமே பங்குபற்றி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏனைய வெளிநாட்டு வீராங்கனைகள் இவ்வாறான இடங்களைப் பெறுவதற்கு 2026 ஆம் ஆண்டில் சுமார் 20 போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியிலும், இவ்வாறான உலகத் தரம் வாய்ந்த போட்டிகளில் சுமார் 10 இற்காவது பங்குபற்ற வாய்ப்புக் கிடைத்திருந்தால், அவரால் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வீராங்கனையாகக் கூட உருவாகியிருக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சனுகி அக்ஷனா அம்பலாந்தோட்டை தர்மாசோக்க கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயின்று வருகிறார்.