2027 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் பின்னணியில், எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது 'X' கணக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு தவறு குறித்தும் பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படுவதை எவரும் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள், ஆனால் இந்த கைது இடம்பெற்ற நேரம் 'மிகவும் கவனிக்கத்தக்கது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய விடயங்கள்
  • 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் தருணத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
  • கைது இடம்பெற்ற காலப்பகுதி மிகவும் சந்தேகத்திற்குரியது என நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
  • மாற்றுக்கருத்துகளை அச்சுறுத்துவதற்கு பொறுப்புக்கூறலை ஒரு போர்வையாகப் பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்துகின்றார்.

மாற்றுக்கருத்துகளை அடக்கும் முயற்சியா?

இது வெறும் தற்செயலான நிகழ்வா அல்லது மாற்றுக்கருத்துகளை முடக்கி, எழுச்சி பெற்றுவரும் தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சியா என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் வினவியுள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்ற அரசியல் இயக்கம், இன்று தமக்கு எதிராக எதிர்ப்புகள் எழும் போது அமைதியிழந்துள்ளதாகத் தெரிவித்து அவர் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

“எதிர்க்கட்சியில் இருக்கும் போது போராட்டம் நடத்தும் உரிமைக்காகக் குரல் கொடுப்பது எளிது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பிறகும் அதே உரிமையை மதிக்கிறார்களா என்பதில்தான் ஜனநாயகத்தின் உண்மையான பரீட்சை உள்ளது”நாமல் ராஜபக்ஷ
இதையும் படியுங்கள்
  • போலிப் பிரச்சாரங்களால் மலையக மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்: மனோ கணேசன் தெரிவிப்பு
  • எந்த அச்சமும் இன்றி இலங்கையில் முதலீடு செய்யுங்கள்: அசோக ரன்வல அழைப்பு
  • முன்மொழியப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய பிரிவை நீக்க அரசு தயார்