தித்வா சூறாவளியின் போது கலாஓயா வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்திலிருந்த 69 பேரைக் காப்பாற்றிய கடற்படை வீரர்கள் மூவருக்கு விசேட வீரப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (சுதேச மொழிகள்) பரீட்சை எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ பாத பாதை எவருக்கும் சொந்தமானது அல்ல என்றும், அது பொதுமக்களுக்கே உரியது என்றும் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம் குறைவடைந்தமை மற்றும் பார்வைத்திறன் மங்கியமை காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான இன்றைய (19) விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான அலுவலகத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் முன்கூட்டியே நேரம் ஒதுக்கும் முறையின் கீழ் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடுவெலை நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.