யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையில் இன்று (19) இடம்பெறவிருந்த விமான சேவைகளை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் சடுதியாக வீழ்ச்சியடைந்தமையும், விமான சேவைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தெளிவான பார்வைத்திறன் இன்மைமையுமே இதற்கான பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய விடயங்கள்
- இன்று (19) யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
- காற்றின் தரம் வீழ்ச்சியடைந்தமையும் பார்வைத்திறன் குறைவடைந்தமையுமே இதற்குக் காரணம்.
- யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீட்டு அளவு 200 ஐத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் மட்டத்தில் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதற்கும் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 200 ஐத் தாண்டியுள்ளதுடன், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் மட்டத்தில் காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.






