புத்த பெருமானின் போதனைகளின் சாரத்தை உள்ளடக்கி, இந்நாட்டின் கலை உலகிற்கு அர்த்தமுள்ள பல பாடல்களைக் கொடையாக வழங்கிய வணக்கத்துக்குரிய ரம்புகன சித்தார்த்த தேரருக்கு புண்ணியங்களை அநுமோதிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மகா சங்கத்தினருக்கு சங்ககத தட்சிணை தானமாக வழங்கப்பட்டது.

இந்த புண்ணிய நிகழ்வில் தெரண ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் திலித் ஜயவீர, தெரண உயர் முகாமைத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மகா சங்கத்தினர் தொடர்பில் பேராசிரியர் தேரர் ஆற்றிய உரை

டிஜிட்டல் தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் தவறான தொடர்பாடல்கள் காரணமாக, சமகால இலங்கை மகா சங்கத்தினர் தொடர்பில் தவறானதொரு விம்பம் சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகம நந்தவங்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் எழுந்தருளியிருந்தனர்.