இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, முன்னர் 8.75 சதவீதமாகக் காணப்பட்ட வட்டி வீதம், 25 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டு 9 சதவீதம் வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கான காரணம்

நேற்று (19) கூடிய நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நிலைமைகள், எதிர்காலக் கண்ணோட்டம் என்பவற்றைத் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.