2027ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இதனைத் தெரிவித்தார்.
தீர்மானத்திற்கான காரணம்
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்கிய போதிலும், இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் முற்றாகப் புறக்கணித்துச் செயற்படுவதன் காரணமாகவே இவ்வாறு எதிராக வாக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக எஸ். சிறிதரன் மேலும் குறிப்பிட்டார்.






