இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்ணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட சுமூக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு நேற்று (25) பிற்பகல் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
முக்கிய விடயங்கள்
- இந்த சந்திப்பு நேற்று (25) பிற்பகல் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- இவ்வாறான சந்திப்புகளினால் நட்புறவு மேலும் பலப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த சுமூக கலந்துரையாடலின் போது, இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என தான் உணர்வதாக, மஹிந்த ராஜபக்ஷ தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும் படியுங்கள்
- செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக டயானா கமகே நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
- PSTA சட்டமூலம் குறித்து பாராளுமன்றத்தில் சிவில் சமூகத்தினரிடம் கருத்து கோரப்பட்டது
- நாமலின் மறுசீராய்வு மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு






