அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) நாடு திரும்பியுள்ளார்.
2027 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு மேலதிகமாக, அரச சேவையின் பெரும்பாலான அத்தியாவசிய கொடுப்பனவுகளை 100 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல் இரண்டு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை நிராகரித்தமைக்கு எதிராக, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புகளுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான கடுமையான அதிகாரங்களைக் கொண்டுவரும் தலைவர்களே இறுதியில் அவற்றிற்குப் பலியாக நேரிடும் என எச்சரித்துள்ளார்.
நாட்டில் நடைமுறையிலுள்ள மேன்பவர் ஊழியர் முறையை முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை வரைந்து வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பெய்த அடைமழைக்கு மத்தியில் வீதியில் இறங்கி காணொளி ஒன்றை வெளியிட்ட பிரபல யூடியூபர் இராஜ் வீரரத்ன, சமூக ஊடகப் பயனர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
யுவெனோ வங்கி வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட பாரிய நெருக்கடியை அடுத்து, பரகுவே ஜனாதிபதி சந்தியாகோ பென்யா பதவியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 'சத்பெத்தி' ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளுக்கான சிகிச்சை மையத்திற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அடிக்கல் நாட்டினார்.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் மெட்ரோ கவுன்சிலின் 11வது மாவட்டத்திற்காக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மெலினா ஹெட்டியாராச்சி போட்டியிட்டுள்ளார்.