கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) உறுப்பினர்களுக்குக் கட்சி ஒழுங்கமைப்பும் உள்ளக ஒழுக்கக் கட்டுப்பாடும் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 7,130 பஸ்களில் சுமார் 5,000 பஸ்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கச் சுற்றறிக்கைகளை மீறிப் பெற்றுக்கொண்ட மேலதிக 11,320 லீற்றர் எரிபொருளுக்கான 1.17 மில்லியன் ரூபாவை வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹீபால ஹேரத் மீளச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெய்னில் அதிவேக ரயில் பாதைகளில் இடம்பெற்ற இரு பாரிய விபத்துக்களை அடுத்து, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கப்பம் கோரிய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு விதிக்கப்பட்ட 25 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையில், மீதமுள்ள 90 இலட்சம் ரூபாயைச் செலுத்த மேலதிக அவகாசம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளின்படி அத்தியாவசியப் பொருட்களுக்கான VAT வரியை நீக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கென்யாவின் பிரதி ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிண்டிகி ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட எட்டு வகையான நிதிப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்படும் நடைமுறை, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க கொங்கிரஸின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி உறுதி செய்துள்ளது. எனினும், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் அவர்களது திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எளிதாக இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.