(யோஹான் பாசுர) குறிப்பிட்ட எட்டு வகையான நிதிப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) கட்டாயமாக்கும் நடைமுறை, நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கேள்வியைக் கருத்திற்கொண்டு, நிதி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இணையவழி முறைமையின் ஊடாக பொதுமக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.