திருத்தப்பட்ட ஒரு கிலோவுக்கான 280 ரூபாய் இறக்குமதி வரி ஜாஸ்மின் மற்றும் ஒட்டும் அரிசிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாடு அரிசி உள்ளிட்ட உள்நாட்டு அரிசி வகைகளுக்குப் பொருந்தாது என்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சானக்க தல்பஹேவவுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் உயரிய ‘ஆர்டர் ஆஃப் சிகத்துனா’ விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை (05) சந்தித்துப் பேசினார்.
பாம்புத் தடியொன்றை ஏந்தியவாறு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணமாக வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஜனாதிபதியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும், வட்டார உறுப்பினர் பதவியிலிருந்தும் அதுல களுஆரச்சி பதவி விலகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (04) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய நிதி மற்றும் நிர்வாக ரீதியான எட்டு கொடுக்கல் வாங்கல்களுக்காக TIN எண்ணை கட்டாயமாக்கும் தீர்மானத்தை 2027 ஏப்ரல் 1 வரை ஒத்திவைக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமைக்கு எதிராக தொடர்ந்தும் போராட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப்படையின் ஆளில்லா வான்வழி அமைப்புக்காக 4,261 மில்லியன் ரூபாவை ஒதுக்க அனுமதி கோரும் 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2024 இல் தனது அரசாங்கம் பதவியேற்ற பின்னர் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்று கூறி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.