அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அந்நாட்டு பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விசேட ஏ.ஐ. காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காணொளியை இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ளது.

முக்கிய விடயங்கள்

  • அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பாராளுமன்ற அதிகாரத்தை ஜனாதிபதி டிரம்ப் இழந்தார்.
  • இதனையொட்டி இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் நையாண்டி செய்யும் ஏ.ஐ. காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • டிரம்பை குப்பைத்தொட்டி ஒன்றில் தூக்கி வீசுவது போல அக்காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காணொளியில் என்ன உள்ளது?

தேர்தலில் தோல்வியடைந்தமையால் புலம்பிக்கொண்டிருக்கும் டொனால்ட் டிரம்பை, வெள்ளை மாளிகையின் ஊழியர்கள் சிலர் தூக்கிக்கொண்டு வெளியே கொண்டுவரும் காட்சி அதில் காட்டப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அவர்கள் அவரை கொண்டுவந்து 'ஆபத்தான கழிவுகள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் தூக்கி வீசும் காட்சிகள் அந்த நையாண்டி வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்

  • ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் திகதி அறிவிப்பு
  • சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிற்கு ரஷ்யாவிலிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு
  • தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க தபால் சேவையினால் புதிய முத்திரை