பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் திட்டத்தின் கீழ், ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் குத்தில ஜயசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷான் கமகே, நிதியத்தின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.பீ.ஆர். ஜயகொடி மற்றும் இதற்கான நிதியுதவியை வழங்கும் விஷ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மிஹிர விக்ரமாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 458 மாணவ மாணவியருக்கு இத்திட்டத்தின் ஊடாகக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.