பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதி முடிசூட்டு விழா நவம்பர் 24 அன்று போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் நடைபெற்றது. இதில் 116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்களைப் பின்தள்ளி, அனைத்து சுற்றுகளிலும் சிறந்து விளங்கி ஜெனிபர் பரெட்டோ வெற்றி பெற்றார்.

இதன் மூலம், மெக்சிகோவின் பாத்திமா போஷை தொடர்ந்து அவர் இந்த மதிப்புமிக்க சர்வதேச கிரீடத்தைச் சூடிக்கொண்டார்.

  • 75 ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியில் போர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பரெட்டோ வெற்றி பெற்றார்.
  • சான் ஜுவானில் நடைபெற்ற இப்போட்டியில் 116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர்.
  • வெனிசுலா வடிவமைப்பாளர் ஜார்ஜ் விட்டல்ஸ் வடிவமைத்த, 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட புதிய கிரீடம் வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது.
  • இவ்வுலகளாவிய போட்டியில் நிம்ஹாரா சசிந்தி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மின்னும் கிரீடமும் பிரபல தொகுப்பாளர்களும்

புதிதாக முடிசூட்டப்பட்ட அழகிக்கு 'தி ரேடியன்ஸ் ஆஃப் எடர்னல் லெகசி' எனப் பெயரிடப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது. வெனிசுலா நாட்டின் நகை வடிவமைப்பாளர் ஜார்ஜ் விட்டல்ஸ் வடிவமைத்த இந்த கிரீடத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஹோசே மிகுவல் அக்ரெலோட் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி ஆர்'போனி கேப்ரியல் மற்றும் மரியோ லோபஸ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். ஜூரி ஹால் மற்றும் 1993 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி டயனாரா டோரஸ் ஆகியோர் வர்ணனையாளர்களாகக் கடமையாற்றினர்.

சர்வதேச அரங்கில் இலங்கை

இதேவேளை, 48 ஆவது இலங்கை பிரபஞ்ச அழகியான நிம்ஹாரா சசிந்தி, 2026 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.