திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வழமையான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. பெய்த பலத்த மழையினால் வைத்தியசாலை வளாகத்திற்குள் நீர் புகுந்ததால், பல பணிகள் தடைப்பட்டன.

ஊழியர்களின் உடனடி தூய்மைப்படுத்தல் பணிகள்

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கினர். சில மணித்தியாலங்களிலேயே முழுமையான தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்த அவர்கள், வழமையான சேவைகளை விரைவாக முன்னெடுக்க உதவினர்.

கொழும்பில் பெய்த கடும் மழை

கொழும்பில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்தே இந்த திடீர் நீர் தேக்கம் ஏற்பட்டது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, சில மணித்தியாலங்களில் 129 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், நகரின் பல வீதிகளும் தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கின.