குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் பாரிய விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரிவு மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பரிசோதனைகளும் கைதுகளும்
நேற்றைய (04) அறிக்கையின்படி, சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 26,868 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் பேரில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






