ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஹட்டன் பிலிஹத்தர பகுதியிலுள்ள சுமார் 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த வீடுகளுக்குள் 3 தொடக்கம் 4 அடி வரை மழைநீரும் சேறும் நிறைந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வீடுகளுக்குள் சிக்குண்டிருந்தவர்களைக் காப்பாற்ற குடியிருப்பாளர்களும் பிரதேசவாசிகளும் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய விடயங்கள்

  • ஹட்டன் பிலிஹத்தர பகுதியில் சுமார் 30 வீடுகள் நீரில் மூழ்கின.
  • வீடுகளுக்குள் 3 தொடக்கம் 4 அடி உயரத்திற்கு மழைநீரும் சேறும் பாய்ந்துள்ளது.
  • வீடுகளில் உள்ளவர்களைக் காப்பாற்ற பிரதேசவாசிகள் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
  • வீடுகளிலிருந்த உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு

ஹட்டன் ஓயாவிற்கு நீர் பாயும் கால்வாய் அடைபட்டு அது பெருக்கெடுப்பதன் காரணமாக, நீண்ட காலமாக தமது வீடுகள் இவ்வாறு அனர்த்தத்திற்கு உள்ளாவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தமையால் அங்கிருந்த சொந்த உடமைகளும் நாசமடைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.