இரத்தினபுரி, ஹிதெல்லன பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (27) நண்பகல் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐவரின் நிலைமை கவலைக்கிடம்
காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியிலிருந்து குருவிற்றை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும், அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றும் ஒன்றுடனொன்று நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





