ஐரோப்பாவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் போலந்திலிருந்து இலங்கைக்கு விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய என்டர் எயார் (Enter Air) விமான சேவையினால் முன்னெடுக்கப்பட்ட 3 ஆரம்பக்கட்ட விமான சேவைகள் (Inaugural Flights) மூலம் 550 சுற்றுலாப் பயணிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- போலந்திலிருந்து 550 சுற்றுலாப் பயணிகளுடன் 3 ஆரம்பக்கட்ட விமானங்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தன.
- கட்டோவிஸ், போஸ்னான் மற்றும் வார்சோ ஆகிய நகரங்களிலிருந்து இந்த போயிங் - 737 ரக விமானங்கள் வருகை தந்துள்ளன.
- 2027 ஏப்ரல் 2 ஆம் திகதி வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருகை தந்த விமானங்களின் விபரங்கள்
இந்த சேவைகளுக்காக என்டர் எயார் நிறுவனம் போயிங் - 737 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்களைப் பயன்படுத்தியிருந்தது. இதன்படி கட்டோவிஸ் (Katowice) நகரிலிருந்து ஈ.என்.ரி.- 7607 ரக விமானமும், காலை 07.40 மணிக்கு போஸ்னான் (Poznan) நகரிலிருந்து ஈ.என்.ரி.- 1913 ரக விமானமும் கட்டுநாயக்கவை வந்தடைந்தன.
இதற்கு மேலதிகமாக வார்சோ (Warsaw) நகரிலிருந்து புறப்பட்ட ஈ.என்.ரி.- 1561 ரக விமானம் காலை 09.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து என்ன?
இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த நகரங்களிலிருந்து குறித்த விமானங்கள் மூலம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






