பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (Protection of the State Terrorism) உடனடியாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஆவரியவத்தை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முக்கிய விடயங்கள்- புதிய சட்டமூலத்தை மீளப் பெறுமாறு கோரி கட்டுநாயக்க ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டம்.
- நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும் அமைப்புகளை தடை செய்வதற்கும் புதிய சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
- 2027 இல் G.S.P.+ சலுகை இழக்கப்பட்டால் ஆடைத் துறையில் 74,000 வேலைவாய்ப்புகள் ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை.
புதிய சட்டமூலம் மீதான குற்றச்சாட்டுகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்தல் மற்றும் பல்வேறு அமைப்புகளைத் தடை செய்வதற்கு வழிவகுக்கும் சரத்துகள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேலைவாய்ப்பு ஆபத்து குறித்த எச்சரிக்கை
2027 ஆம் ஆண்டில் G.S.P.+ சலுகை முடிவுக்கு வரவுள்ளதாகவும், அச்சலுகை இழக்கப்பட்டால் ஆடைத் துறையில் 74,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படியுங்கள்- ஆயுர்வேத வைத்தியர்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்தனர்: பல முக்கிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடல்
- மேலாடையின்றி பச்சைகளைக் காட்டியவாறு பாராளுமன்ற நுழைவாயில் அருகே ஜெஹான் அப்புஹாமி போராட்டம்
- குமார ஜயகொடி, சுனில் வட்டகலவின் சொத்துகள் குறித்து இலஞ்ச ஆணைக்குழு விரிவான விசாரணை






