ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (09) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரினால் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டன.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கக்கூடிய காலத்தை 72 மணித்தியாலங்களில் இருந்து 48 மணித்தியாலங்களாகத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
முக்கிய விடயங்கள்- சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 72 மணித்தியாலங்களில் இருந்து 48 மணித்தியாலங்களாகத் திருத்தப்படும்.
- பச்சை குத்துதல் மற்றும் அடையாளங்கள் தொடர்பில் சேர்க்கப்பட்டிருந்த ஏற்பாடுகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- வழக்குத் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் சரத்தும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சரத்துகள் நீக்கம்
இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பச்சை குத்துதல் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஏற்பாடுகளும் நீக்கப்படும் என்று அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடுமையான குற்றவியல் வழக்கிற்குரிய விடயமொன்றைப் பகிரங்கப்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சரத்தை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்தார்.






