இரண்டு அமைச்சுக்களுக்காகப் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான சட்டத்தரணி ரோஷன் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய விடயங்கள்
- டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி ரோஷன் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
- இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளர் பதவி டி.ஆர்.டபிள்யு.எஸ். தனபாலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று பிற்பகல் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் புதிய செயலாளர்
இதற்கு முன்னர் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டி.ஆர்.டபிள்யு.எஸ். தனபால, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனங்கள் தொடர்பான கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.






