சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு கோரி, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அந்த நடவடிக்கைகளை தர்ம மற்றும் விதிகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டியுள்ளதால் விரைவில் திகதியொன்றையும் நேரத்தையும் ஒதுக்கித் தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
- வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க இத்தேபான தம்மாலங்கார தேரர் வசதிகளைக் கோருகிறார்
- குறித்த கடிதம் ஒக்டோபர் 30 ஆம் திகதி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
- இது தொடர்பில் ஆலோசனைகளைக் கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பௌத்த விவகார ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்
சிறைச்சாலையின் நடவடிக்கை
தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து அது குறித்து அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ள இந்தக் கடிதத்தின் பிரதியொன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வினவியபோது, குறித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, அடுத்தகட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பௌத்த விவகார ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேரரின் கோரிக்கை குறித்து மேலும் விளக்கி அவர் குறிப்பிட்டுள்ளார்.






