தமக்கு மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எவ்வித எதிர்பார்ப்போ அல்லது ஆர்வமோ இல்லை என்று முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் விசேட குறிப்பொன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முக்கிய விடயங்கள்

  • அரசியலில் மீண்டும் ஈடுபடும் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு
  • நவம்பர் 14 ஆம் திகதி தமது வாழ்க்கையில் இரு முக்கிய திருப்புமுனைகளைக் குறிப்பதாக வெளிப்படுத்தல்
  • அரசியலில் இருந்து விலகி கூட்டாண்மை துறைக்கு பிரவேசித்து தற்போது 23 மாதங்கள் கடந்துள்ளதாக தகவல்

வாழ்க்கையின் இரண்டு முக்கிய திருப்புமுனைகள்

நவம்பர் 14 ஆம் திகதி தமது வாழ்க்கையில் இரண்டு முக்கிய திருப்புமுனைகளைக் குறிப்பதாக அவர் தெரிவிக்கிறார். அதில் முதலாவது, தந்தை தம்மைவிட்டு பிரிந்த பின்னர் வருகின்ற அவரது 84 ஆவது பிறந்த நாளை நினைவு கூர்வதாகும்.

இரண்டாவது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில் தாம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டமையாகும். அதன் முடிவு எதிர்பார்த்தவாறு அமையாவிட்டாலும் அது ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்தது என்றும், அதற்கு ஒரு மாதத்தின் பின்னர் தாம் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக விலகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்று, நவம்பர் 14 ஆம் திகதி எனது வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மைல்கற்களைக் குறிக்கிறது. அதில் முதலாவது எனது தந்தையின் 84 ஆவது பிறந்தநாளை நினைவு கூர்வதாகும். அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு வரும் முதல் பிறந்தநாளும் இதுவேயாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். அதன் முடிவு நான் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், அது எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்தது.”

புதிய தொழில் வாழ்க்கை குறித்த வெளிப்படுத்தல்

அரசியலில் ஈடுபட்டிருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த வாய்ப்புகள், வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். அரசியலில் இருந்து நிறுவனத்துறைக்கு மாறி தற்போது 23 மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் பகுதிநேரமாகத் தொடங்கப்பட்ட அந்தப் பணி இப்போது முழுநேர அர்ப்பணிப்பாக மாறியுள்ளதுடன், அப்பணியை மிகுந்த மனநிறைவுடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.