சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது மனைவியினால் கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன் கெமராக்களும் 16 மைக்குகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி எதனிலும் முறையான கல்வியைப் பெற்றவர் அல்லர் என தேசிய ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அண்மைய நீதிபதிகள் இடமாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவசர விவாதங்களை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக நாடியுள்ளது.
புத்தசாசனம் தொடர்பான அண்மைக்கால சம்பவங்கள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு அவசர விவாதங்களை பெற்றுத்தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் SLPP கோரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 11 அன்று திட்டமிடப்பட்டுள்ள விமானப் பரீட்சார்த்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வணிக ரீதியான பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து எஸ்ஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டுவந்த 39 ட்ரோன்கள், உரிய அனுமதிகள் சமர்ப்பிக்கப்படாததால் இலங்கை சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
கண்டி பன்முகப் போக்குவரத்து முனையம் 2027 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடைவதற்கு முன்னர் மக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னர் இருந்ததை விட எரிபொருள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கப்பட்ட 36 முக்கிய முன்மொழிவுகளில் சுமார் 40 வீதமானவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெரிட்டே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.