ஹொங்கொங்கின் பிரபல ஜனநாயக செயற்பாட்டாளரான 30 வயதுடைய ஜோசுவா வொங்கிற்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அந்நகரத்தின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுச் சக்திகளுடன் இரகசியத் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள்

சுயவிருப்பின் பேரில் நாட்டை விட்டு வெளியேறிய செயற்பாட்டாளரான நேதன் லோ மற்றும் பிற நபர்களுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டில் சதித்திட்டம் தீட்டியதாக வொங் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வெளிநாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது சீனாவுக்கு வெளியிலுள்ள தனிநபர்களைத் தூண்டி, ஹொங்கொங் மற்றும் சீன அரசாங்கங்களுக்கு எதிராகத் தடைகள் அல்லது முற்றுகைகளை விதிப்பதுடன், ஏனைய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட அழைப்பு விடுத்தமையும் இந்தத் திட்டத்தில் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜனநாயக இயக்கத்தின் முன்னாள் முன்னணி நபராக விளங்கிய இவர், இக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு கடந்த செப்டெம்பர் மாதமே குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.