இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு அல்லது எல்.என்.ஜி. வழங்குவதற்காக அபுதாபியின் ADNOC நிறுவனம் மற்றும் இந்தியாவின் Gujarat Energy Limited நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையானது 10 வருட காலப்பகுதிக்கு நடைமுறையில் இருக்கும் ஒரு நீண்டகால விநியோக ஒப்பந்தமாகும்.

முக்கிய விடயங்கள்

  • 2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 4 மில்லியன் மெட்ரிக் தொன் வரையான எல்.என்.ஜி. இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
  • இது ADNOC நிறுவனம் இந்தியாவுடன் கையெழுத்திட்ட ஐந்தாவது எல்.என்.ஜி. ஒப்பந்தமாகும்.
  • ADNOC நிறுவனத்தின் XRG சர்வதேச எரிவாயு விநியோகப் பிரிவிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலாவது எல்.என்.ஜி. விற்பனை இதுவாகும்.

விநியோகம் எப்போது ஆரம்பமாகும்?

குறித்த ஒப்பந்தத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆண்டுக்கு 4 மில்லியன் மெட்ரிக் தொன் வரையான எல்.என்.ஜி. இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.

ADNOC நிறுவனத்தின் சர்வதேச முதலீட்டுப் பிரிவான XRG கொண்டுள்ள சர்வதேச எரிவாயு விநியோகப் பிரிவிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலாவது எல்.என்.ஜி. விற்பனையாக இது பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எல்.என்.ஜி. விநியோகிப்பதற்காக ADNOC நிறுவனம் கையெழுத்திட்ட ஐந்தாவது ஒப்பந்தம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிசக்தி கூட்டாண்மை குறித்த அறிவிப்பு

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இந்தியாவுடனான நீண்டகால எரிசக்தி உறவு மேலும் வலுப்படுத்தப்படுவதாக ADNOC நிறுவனத்தின் எல்.என்.ஜி. விற்பனை மற்றும் விநியோகப் பிரிவின் பிரதான அதிகாரி ரஷீத் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்indialkanews