இந்தியாவின் உத்தராகண்ட் பகுதியில் இருந்து மிகவும் சோகமான செய்தியொன்று பதிவாகியுள்ளது. பயணிகள் பயணித்த பஸ் ஒன்று துரதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
முக்கிய விடயங்கள்
- உத்தராகண்ட் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்தது பஸ்
- விபத்தில் 6 பேர் பலி, 20 பேர் காயம்
- விபத்து நடந்த போது பஸ்ஸில் சுமார் 35 பயணிகள் பயணித்துள்ளனர்
100 மீற்றர் பள்ளத்தில் பாய்ந்த பஸ்
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த பஸ்ஸில் சுமார் 35 பயணிகள் வரை பயணித்துக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. பாலமொன்றிற்கு அருகில் பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.






