இலங்கையின் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பிரதான வழக்கறிஞர் நாயகம் அலெக்சாண்டர் குட்சானுக்கும் (Aleksander Gutsan) இடையிலான சந்திப்பொன்று 26 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் சட்ட ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இந்த முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
முக்கிய விடயங்கள்
- சட்ட ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
- ரஷ்யாவில் தலைமறைவாகியுள்ள இலங்கைக் குற்றவாளிகளையும் அவர்களது சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு ரஷ்யா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
- இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஒத்துழைப்பு
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நபர்கள் குறித்தும், அவர்கள் மறைத்து வைத்துள்ள நிதி மற்றும் சொத்துக்கள் குறித்தும் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
குற்றச் செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ், அத்தகைய விடயங்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்குவதாக ரஷ்ய கூட்டமைப்பின் பிரதான வழக்கறிஞர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட துறைகளில் இலங்கை வழங்கும் ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், இந்நிகழ்வில் ரஷ்ய கூட்டமைப்பினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இது குறித்தும் வாசியுங்கள்
- ரஷ்ய சட்டமா அதிபர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகை
- இந்தியாவை வீழ்த்தி வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது இலங்கை 'ஏ' அணி
- எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 31 பேர் உயிரிழப்பு






