மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராகக் கடமையாற்றிய காமினி ஜாசிங்க, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய விடயங்கள்- தலைவர் காமினி ஜாசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.
- பதவி விலகலுக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
- அவர் 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
காரணம் இதுவரை வௌிப்படுத்தப்படவில்லை
அவர் இவ்வாறு தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவிக்கு காமினி ஜாசிங்க, 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்- நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது
- தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை சட்டமா அதிபரிடம் சென்றது
- 30 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணையுமா? முடிவு நாளை மறுதினம்
சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





