உலக வங்கியின் புதிய தரவு அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பாரிய கடன் நெருக்கடி தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 68.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் இருப்பு, 2025 ஆம் ஆண்டளவில் 135.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய விடயங்கள்
  • 2015 இல் 68.7 பில்லியன் டொலர்களாக இருந்த கடன் 2025 ஆண்டளவில் 135.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
  • மொத்தக் கடனில் 107.08 பில்லியன் டொலர் அரச மற்றும் அரச உத்தரவாதத்துடனான கடன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தனி நாடாக அதிக கடன் வழங்கிய நாடாக சீனா முன்னிலையில் உள்ளதுடன், அத்தொகை 22.4 பில்லியன் டொலர்களாகும்.

கடன் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்

இம்மொத்த கடன் தொகையில் 107.08 பில்லியன் டொலர் அரச மற்றும் அரச உத்தரவாதங்களின் கீழ் பெறப்பட்ட கடன் என தெரிவிக்கப்படுகிறது. இது தவிர, அரச உத்தரவாதங்கள் அற்ற தனியார் துறையினரால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகை 17.58 பில்லியன் டொலர்களாகவும், குறுகிய கால வெளிநாட்டுக் கடன் தொகை 10.45 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

அரச மட்டத்திலான கடன்களில் அதிகூடிய பகுதியான 56.83 பில்லியன் டொலர் பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதுடன், இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட தொகை 42.43 பில்லியன் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக கடன் வழங்கியது சீனா

பாகிஸ்தானுக்கு அதிகளவிலான கடன் தொகையை வழங்கிய தனி நாடாக சீனா தொடர்ந்தும் நீடிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பாகிஸ்தான் சீனாவிற்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை சுமார் 22.4 பில்லியன் டொலர்கள் என மேலும் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்
  • உறவினர் சிறுமியின் வீடியோவை ஸ்னாப்சாட்டில் பகிர்ந்த ஐக்கிய அரபு இராச்சியப் பெண்ணுக்கு சிறைத் தண்டனையும் நாடு கடத்தலும்
  • சூப்பர் மார்க்கெட் குளிரூட்டிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
  • சுவசரியவிற்கு இந்தியாவிலிருந்து புதிய 100 அம்பியூலன்ஸ்கள்