உள்நாட்டுத் தேவை அதிகரித்தமையைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று பெலவத்தையிலுள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கயானாவின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னணி பாலைவன சாகசப் பயணியான மிட்செல் பெரேரா, சத்திரசிகிச்சைக்குப் பின்னரான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக துபாயில் தனது 59 ஆவது வயதில் காலமானார்.
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதிகள் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் மாற்றங்களைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அதனைத் தேசிய நினைவுச்சின்னமாகப் பிரகடனப்படுத்தும் நிறைவேற்று உத்தரவொன்றில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியாவின் அந்தமான் பகுதியில் நடைபெற்ற ‘பிம்ஸ்டெக் 2026’ கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கொமாண்டர் சமீர மதுஷங்க சமரகோன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பிரித்தானியத் தடைகள் காரணமாக, அவர் ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரித்தானியாவுக்கு வரமாட்டார் என பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
அம்மானிலுள்ள இலங்கைத் தூதரக கட்டடத்திற்கு வெளியில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பின்றி, ஜோர்தானிலுள்ள அனைத்துத் தூதரக ஊழியர்களும் இலங்கை பிரஜைகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தில் தீர்மானமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னணிப் போட்டியாளராக ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் ஒசாஃப் உருவெடுத்துள்ளார்.
முக்கிய சந்தையொன்றில் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் நோக்கில், அப்பிள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு அம்சங்களின் முன்னோட்டப் பயன்பாட்டை சீனாவில் ஆரம்பித்துள்ளது.