புதிய மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியைப் பார்வையிடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (8) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் அவருடன் உடனிருந்தார்.
முன்னைய தாமதங்கள் சீர்செய்யப்பட்டன
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கமகே, தேவையான சுற்றாடல் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே முன்னதாகப் பணிகள் தாமதமடைந்ததாக விளக்கமளித்தார். எனினும், தற்போது உரிய அனைத்து ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, ஆரம்பக்கட்டப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும், முழுமையான நிர்மாணப் பணிகளையும் ஓராண்டுக்குள் நிறைவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் யாழ்ப்பாணத்தின் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு, வடக்கு மாகாணம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தகட்ட நடவடிக்கை
நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஓராண்டுக்குள் இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.






