பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தப்பியோடியுள்ளார்.
மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் ஏப்ரல் 2026 முதல் காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிக்க இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய பகுதியில் தந்தம் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யானையொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 34 வயதுடைய முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 190 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கின் சந்தேகநபர்கள் இருவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (05) உத்தரவிட்டார்.
வனவிலங்கு குற்றங்களைத் தடுக்கும் விசேட நடவடிக்கையின் போது வேட்டை உபகரணங்கள் மற்றும் விலங்கு பாகங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாதங்களுக்கு முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக 190 பில்லியன் ரூபாய் நிதியை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜிப்ரி மொஹமட் உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளை ஏமாற்றி நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட சுமார் 792 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்று அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜி.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையவழி துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 47 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி வெளியிடப்பட்ட அறிவிப்பை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு பொலிஸார் ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.