திரிபோஷ உற்பத்திக்காக கடந்த ஜனவரி மாதம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கப் பொது முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) உப குழு முன்னிலையில் இலங்கை திரிபோஷ நிறுவனம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
- ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கப் பொது முயற்சிகள் பற்றிய குழுவின் உப குழு முன்னிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
- தொகையை விடுவிப்பதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படவில்லை என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தலைவர் கூறும் காரணம்
குறித்த குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் இந்த சோளத் தொகையை விடுவிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தராத காரணத்தினால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





