தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) சில பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையின் நிலவரமும் சட்ட நடவடிக்கைகளும்

பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்பட்டிருக்கும்.

இந்த உத்தரவுகளை மீறி அனுமதிப்பத்திர நிபந்தனைகளுக்கு முரணாக மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவரேனும் இந்த விதிகளை மீறினால் அது தொடர்பில் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.