அறியாமை என்ற இருளை ஞானம் என்ற ஒளி வென்றெடுப்பதை தீபாவளி பண்டிகை குறிக்கின்றது என சர்வஜன பலய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகம் எதிர்கொள்ளும் அன்றாட இருளை இந்த புனித ஒளி போக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆசிர்வாதம் நிறைந்த தீபாவளி பண்டிகைக்கான தனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
கலாசார அடையாளம்
மனிதநேயம், சகலரையும் உள்ளடக்கும் தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகிய எமது பொதுவான விழுமியங்களை வெளிப்படுத்துவதனால், தீபாவளி பண்டிகையானது நாட்டின் அனைவருக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் தீபங்களை ஏற்றி கொண்டாடுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்நிகழ்வு இந்நாட்டின் கலாசாரத்தில் இன்றியமையாத பங்கினை வகிக்கும் ஒரு தனித்துவமான நடைமுறை எனவும் விவரித்தார்.
"தீபாவளி பண்டிகையானது எமது சகலரையும் உள்ளடக்கும் தன்மை, மனிதநேயம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விழுமியங்களை வெளிப்படுத்துவதனால், அது அனைத்து இலங்கை மக்களுக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனது நம்பிக்கையாகும்."திலித் ஜயவீர






