இலங்கை இராணுவத்தினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து கலாவெவ வடக்கு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத வேட்டையாடுதலைத் தடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வேட்டை உபகரணங்களும் வனவிலங்கு பாகங்களும்
இந்தச் சோதனையின் போது, சட்டவிரோத வேட்டையாளர்களால் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், துப்பாக்கி ரவைகள், வெடிமருந்து, கண்ணிகள் மற்றும் ஹக்கபட்டாஸ் எனப்படும் வெடிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
வேட்டை உபகரணங்களுக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட வளாகத்திலிருந்து மான் கொம்புகள் மற்றும் முயல் இறைச்சி என்பனவும் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
'ஹஸ்தி சேனா' திட்டம்
காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கும், மனித-யானை மோதலைக் குறைப்பதற்குமாக வடிவமைக்கப்பட்ட 'ஹஸ்தி சேனா' திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோத வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தி, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இவ்வாறான கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






