மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் களப்பணிகளை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 281 சுற்றாடல் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (25) சுற்றாடல் அமைச்சு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. நிறுவன ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெற்றுள்ளவர்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமை அலுவலகம், மாகாண அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு எதிர்காலத்தில் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய விடயங்கள்

  • 281 புதிய அதிகாரிகளுக்கு இன்று (25) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
  • மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலேயே அதிகாரிகள் இணைக்கப்பட்டிருந்தனர்
  • இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானோர் ஒரே தடவையில் 1997 ஆம் ஆண்டிலேயே இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்

நீண்ட காலத்திற்குப் பின் இடம்பெற்ற விசேட ஆட்சேர்ப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இறுதியாக 2017 ஆம் ஆண்டிலேயே சுற்றாடல் அதிகாரிகள் இணைக்கப்பட்டிருந்ததுடன், இவ்வாறானதொரு பெருந்தொகையானோர் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவது 1997 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய சுற்றாடல் சட்டம் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மிகவும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தைப் பூர்த்தி செய்துகொள்வதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.