வணக்கத்துக்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட மூன்று பௌத்த பிக்குகள் இன்று (11) காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ருவன்வெலிசாய முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்ணாவிரதத்திற்கான காரணங்கள்

அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்தை இடைநிறுத்துதல் மற்றும் வணக்கத்துக்குரிய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ருவன்வெலிசாய முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வணக்கத்துக்குரிய கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகளும் இவ்வாறு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.